• Jan 17 2025

ரோகிணிக்கு சமாதி கட்டிய முத்து;மனோஜ் கேட்ட லிஸ்ட்டினால் வெடித்த பூகம்பம்!மீனா சொன்ன ஐடியா

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரோகிணி சிட்டியிடம் பணம் வாங்கிய விஷயத்தை முத்து மனோஜிடம் சொல்லுகின்றார். இதனால் மனோஜ் ரோகினியிடம் சிட்டியிடம் பணம் வாங்கிய விஷயத்தை ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்கின்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரோகிணி நீ வேலைக்கு போகாத போது நிறைய செலவாகிட்டு.. அதனால் தான் கடன் வாங்கினேன் என்று சொல்லி சமாளிக்கின்றார்..

இந்த விஷயத்தை ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்கவும், ஏன் கடனை அடைக்கப் போகின்றாயா? நான் தானே கடன் காசை கட்டிக் கொண்டிருக்கின்றேன் என்று சொல்லுகின்றார். இதனால் நீ யார் யார்ட்ட என்னென்ன கடன் வாங்கி இருக்கா என்ற லிஸ்ட்டை தருமாறு மனோஜ் கேட்க, அதற்கு தான் அப்பாவுடன் இருந்த வரைக்கும் எந்த கடனும் வாங்கவில்லை.. உன்னை கல்யாணம் செய்த பிறகு தான் கடனாளி ஆனேன் என்று சொல்லுகின்றார்.

இதை தொடர்ந்து மீனா முத்துவிடம் சிட்டியிடம் பணம் வாங்கிய விஷயத்தை கேட்டபோது அவர் உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டதாகவும் , சிட்டி  தான் வீடியோ வெளியிட்டார் என்ற விஷயத்தை பேசிய போது ரோகிணியின்  முகம் வேர்த்து காணப்பட்டதாகவும் சொல்லுகின்றார். இதனால் இந்த விஷயத்தில் ஏதோ மர்மம் இருக்குது கண்டுபிடிக்கின்றேன் என முத்து சொல்லுகிறார்.


அதன் பின்பு மீனா பூ கொடுப்பதற்காக சீரியல் நடிகரின் வீட்டுக்கு செல்கின்றார். இதன் போது அவருடன் முத்துவும் செல்கின்றார். அங்கு நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் என்று அவருடன் போட்டோ எடுத்துக் கொள்கின்றார் முத்து. மேலும் தனது அண்ணன் பண விஷயத்தில் ஏமார்ந்த விஷயத்தையும் சொல்லுகின்றார். ஆனாலும் தனக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாது என்று சீரியல் நடிகர் சொல்லுகின்றார்.

இதன் போது அங்கு வந்த சிந்தாமணி கல்யாண ஆர்டர் பற்றி கேட்க, சிந்தாமணிக்கு பெரிய ஆர்டரையும் மீனாவுக்கு சின்ன ஆர்டரையும் கொடுக்கின்றார் சீரியல் நடிகர். ஆனாலும் முழு ஆர்டரையும்  தனக்கு தருமாறு சிந்தாமணி கேட்க , அவர் மறுக்கின்றார். இதனால் உங்களுக்கு இஷ்டம் இருந்தால் செய்யுங்கள் என்று சொல்ல,  சிந்தாமணி சமாளித்து செல்கிறார்.


இறுதியில் விஜயா வீட்டில் மீனா சாப்பாடு செய்யாமல் போனதாக கேட்டுக்  கொண்டிருக்க அங்கு வந்த மீனா தான் ஏற்கனவே சாப்பாடு செய்து வைத்து விட்டு தான் சென்றதாக சொல்கின்றார். மேலும் பணத்தை ஏமாற்றியவர் போட்டோ இல்லாத காரணத்தினால் கோவிலில் சிசிடிவி இருக்கும் அதை நான் கேட்டு வாங்கி தருகிறேன் என மீனா சொல்ல, உடனே வேண்டாம் என்று மறுக்கின்றார் ரோகினி. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement