விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை பார்த்து வருகின்றார்கள். இந்த நிகழ்ச்சிக்கு இருக்கும் ரசிகர்களின் அமோக வரவேற்பினால் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது.
பிக்பாஸ் சீசன் எட்டுக்கான டைட்டில் வின்னருக்கான போட்டியில் தீபக், அருண், சௌந்தர்யா, முத்துக்குமாரன், விஷால், பவித்ரா, ரயான் ஆகியோர் காணப்படுகின்றனர். குறித்த போட்டியாளர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் ஏற்கனவே பிக் பாஸ் இல் இருந்து எலிமினேட்டாகி வெளியே சென்ற எட்டு போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்கள்.
அவர்களுக்கு இருவரை எலிமினேட் பண்ணுவதற்கான அதிகாரத்தையும் வழங்கியுள்ளார் பிக்பாஸ். இதனால் இந்த சீசனில் இருந்து வெளியேறி மீண்டும் உள் நுழைந்த போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை பழி தீர்ப்பதற்காக காத்துக் கொண்டுள்ளனர்.
தற்போது பிக்பாஸ் வீட்டில் மாரத்தான் டாஸ்க் இடம் பெற்று வருகின்றது. இதன்போது வீட்டில் உள்ள போட்டியாளர்கள் பிரபலங்களின் கெட்டப் போட்டு ஆடிப் பாடி மகிழ்ந்து வருகின்றார்கள். இதனால் இந்த வாரம் சுவாரஸ்யம் மிக்கதாக காணப்படுகின்றது .
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்த ரவிந்தர் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பார்த்திபன் போட்ட கெட்டப்பை போட்டு ரசிகர்களை கதற வைத்துள்ளார்.
இதன்போது அவர் பார்த்திபன் கெட்டப்பில் நடனம் ஆடிய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? என்று கமெண்ட் பண்ணி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Podu💥#Biggbosstamilseaaon8
pic.twitter.com/E4ROv0cst7
Listen News!