• Sep 25 2023

எப்படியாவது அவங்களுக்கு தாங்கிற சக்தியைக் கொடு இறைவா... விஜய் ஆண்டனி மகள் மரணத்தினால் கலங்கிப்போன கௌதம் கார்த்திக்...!

Prema / 6 days ago

Advertisement

Listen News!

விஜய் ஆண்டனி பிரபல நடிகர் மட்டுமல்லாது சிறந்த இசையமைப்பாளரும் ஆவார். அவரின் மனைவியும் திரைத்துறையில் தயாரிப்பாளராக இருக்கிறார். மேலும் இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அவரின் மூத்த மகள் இன்று அதிகாலை 3 மணியளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


இதனையடுத்து பலரும் விஜய் ஆண்டனிக்கு தங்களது இரங்கலினையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் கௌதம் கார்த்திக்கும் விடயமறிந்து தனது இரங்கலினை விஜய் ஆண்டனி குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளார்.  


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "காலையிலேயே இப்படியான ஒரு துயரமான செய்தியை அறிந்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்து விட்டேன், பிரதர் விஜய் ஆண்டனிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். கடவுள் இந்த துயரில் இருந்து மீண்டு வர விஜய் ஆண்டனிக்கும் அவரது குடும்பத்துக்கும் சக்தியை கொடுக்க வேண்டும்" என மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement