• Jun 23 2024

குரங்கு சேட்டைக்கு தயாரான எஸ்கே.. ஆகமொத்தம் 14 படம் ஓடிடியில் ரிலீஸா?

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது ஓர் அனுபவம் என்றால், வீட்டிற்குள் அமைதியாக உட்கார்ந்து இருந்து படம் பார்ப்பதும் சிறந்த அனுபவமாக காணப்படுகிறது.

இதன்படி இந்த வாரம் எந்தெந்த தளத்தில் என்னென்ன படம் வெளியாக உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 14 படங்கள் இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளன.

அதன்படி இந்த வாரம் தெலுங்கு படமான கிங்ஸ் ஆப் கோதாவரி , இந்தியில் மகாராஜ், அபாங் ஆதிக், ஏஜென்ஸ் ஆப் மிஸ்டரி, டெல் திம் யூ லவ் மீ , நைட் மேர்ஸ் அண்ட் டே ட்ரீம்ஸ் போன்ற படங்கள் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளன.


மேலும் தி பாய்ஸ் என்னும் வெப் சீரிஸின் நான்காவது எபிசோட், சோலிவுட் என்னும் மராத்தி படம், கிரீன் பார்டர் ஆகியவை அமேசன் பிரைம் தளத்தில் ரிலீஸ் ஆகின்றன.

ஜீ 5 தளத்தில் பருவு என்னும் தெலுங்கு ஆக்சன் திரில்லர் திரைப்படம் மற்றும் லவ் கி அரேஞ்ச் மேரேஜ் என்னும் ஹிந்தி படமும் ரிலீஸ் செய்யப்படுகிறது.

அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் வெயிட்டு  நல்ல விமர்சனத்தை பெற்ற குரங்கு பெடல் படமும் நாளை ஆஹா தமிழ்  ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அத்துடன் டியர் நானா, பாரிஜா பருவம் போன்ற தெலுங்கு படங்களும் ரிலீஸ் ஆக உள்ளன.

Advertisement

Advertisement