• May 20 2024

'பிரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயனின் சம்பளம் இத்தனை கோடியா?..வாயைப் பிளந்த ரசிகர்கள்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தன்னுடைய நகைச்சுவை நிறைந்த நடிப்பினால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக அதிகளவான ரசிகர்கள் பட்டாளத்தை தனக்கென வைத்துள்ளார்.

நடிகர்களைப் பொறுத்த வரையில் ஒரு படம் ஹிட்டாக அமைந்தால் போதும் உடனே சம்பளத்தை உயர்த்தி விடுவார்கள். இதற்கு நம்ம சிவகார்த்திகேயன் ஒன்றும் விதி விலக்கானவர் இல்லை. இவரும் தற்போது தொடர்ந்து 'டாக்டர், டான்' என அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்களை தந்து வருகிறார்.

இந்தநிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அனுதீப் இயக்கத்தில் உருவான 'பிரின்ஸ்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக உக்ரேன் நாட்டு மாடல் அழகி நடித்துள்ளார். மேலும் இந்தப்படம் ஆனது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது. அத்தோடு இப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் சத்யராஜ்ஜும் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் உடைய கதை ஆனது சுற்றுலாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதாவது மொழி தெரியாத ஒரு வெளிநாட்டு பெண்ணுக்கு சிவகார்த்திகேயன் ஊரை சுற்றி காண்பிப்பதாக அமைந்திருக்கின்றது. அந்தசமயத்தில் இவர்கள் இருவருக்கிடையே ஏற்படும் காதல் கதை தான் 'பிரின்ஸ்' படத்தின் கதை. இதனால்தான் இப்படத்திற்கு வெளிநாட்டிலிருந்து ஹீரோயின் தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும் இந்தப் படம் ஆனது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் 'பிரின்ஸ்' படத்தை மொத்தமாக 47 நாட்களில் படக்குழுவினர் எடுத்து முடித்துள்ளனர். அதில் சிவகார்த்திகேயன் மட்டும் 26 நாட்கள் கால்சீட் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது கரெக்டாக அந்த நாட்களில் வந்து தனது படப்பிடிப்பில் கலந்துகொண்டு பக்காவாக நடித்தும் கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் சமீபத்தில் 'பிரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயனின் சம்பளத்தை அறிந்த கோலிவுட் திரையுலகமே வாயைப் பிளந்துள்ளது. அதாவது இதில் ஒரு நாளைக்கு 90 லட்சம் என 26 நாட்களுக்கு 23 கோடி சம்பளமாக சிவகார்த்திகேயன் பெற்றுள்ளார்.

இதைக் கேள்விப்பட்ட கோலிவுட் பிரபலங்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் 26 நாட்களுக்கு 23 கோடி சம்பளமா என அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாது தற்போது உள்ள டாப் நடிகர்களே இவ்வளவு சம்பளம் வாங்குவார்களா என்பது சந்தேக விடயம் தான். இவ்வாறு இருக்கும் போது சிவகார்த்திகேயன் இவ்வளவு சம்பளம் வாங்கினால் யாருக்குத்தான் வியப்பாக இருக்காது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement