• May 20 2024

விஜய்யின் நான் வாழும் உலகம்; பேரைக் கேட்டாலே ரொம்ப வித்தியாசமாய் இருக்கே!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் 'நாளைய தீர்ப்பு' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்றுவரை ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்திருக்கின்றார். இவரது எந்தக் கூச்சமும் இல்லாத சிறந்த நடிப்புத் திறமையால் தமிழகத்தில் மட்டுமன்றி உலகமெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்து இருக்கின்றார்.

எந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அதற்கேற்றவாறு தன்னை மாற்றியமைத்து அந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து முடிக்கும் திறமை இவருக்கு உண்டு. நாளைய தீர்ப்பில் தொடங்கி பீஸ்ட் வரை இவர் நடித்த படங்கள் எண்ணிலடங்காதவை. இந்த நிலையில் இவர் தற்போது வம்சியின் இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்து வருகின்றார். குடும்ப செண்டிமெண்ட் கதையை மையமாகக் கொண்டமைந்த இந்தப் படமானது அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கெனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை என்றாலும் இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியானது தான் எனக் கூறப்படுகின்றது. ஏனெனில் இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் ஒரு முறை மேடையில் வெளிப்படையாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் தற்போது 'தளபதி 67' திரைப்படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது இந்த திரைப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் 'நான் வாழும் உலகம்' என்ற தலைப்பை வைக்க முடிவு செய்துள்ளாராம். மேலும் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளில் இந்த படம் த்ரிலிங்காக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் 'நான் வாழும் உலகம்' என்ற இந்தத் தலைப்பை வைத்துப் பார்க்கும் போது விஜய் தனக்கென ஒரு தனி உலகத்தை உருவாக்கிப் படத்தில் பட்டையை கிளப்புவார் என்று தெரிகிறது. அந்த வகையில் இந்தப்படமானது ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாகவும் இருப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அதுமட்டுமல்லாது லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் இயக்கிய 'விக்ரம்' திரைப்படம் அதிகளவிலான வசூலை பெற்று மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இப்படத்தில் இடம் பெற்றிருத்த ஆக்சன் காட்சிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதேபோன்று அவர் இயக்க இருக்கும் விஜய்யின் இந்தப்படத்திலும் அப்படிப்பட்ட காட்சிகள் நிறைய இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement