• Sep 20 2024

பிரபல நடிகரின் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். தொடர்ந்து செல்லமே, காதல், பட்டியல், வெயில் போன்ற நல்ல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை கொண்டுள்ளார்.

சிறு வயதில் இருந்தே டான்சில் மிகவும் ஆர்வம் கொண்ட நடிகர் பரத் , ஒரு சர்வதேச டான்ஸ் ஸ்கூலில் சேர்ந்து டான்ஸ் கற்றுக்கொண்டார். மலையாளத்தில் இவர் நடித்த தி 4 பீப்பில்’ படம் 2004 இல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நடுவண் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2022-ல் தேர்வானது.

தற்போது எம்.சக்திவேல் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “மிரள்”. இப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக வாணி போஜனும், முக்கிய கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமாரும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் மீர் கிருஷ்ணன், ராஜ்குமார்,காவ்ய, அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி மாஸ்டர் அங்கித் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு பிரசாந்த் எஸ்.என். இசையமைக்கிறார்.பாலா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கலைவாணன்.ஆர்படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.ஸ்லாஷர் த்ரில்லராக உருவாகியுள்ள "மிரள்" திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement