சிவகார்த்திகேயன் நடித்த படத்தை தயாரித்த நிறுவனத்திற்கு அந்த படத்தின் மூலம் 65 கோடி லாபம் கிடைத்த நிலையில் தற்போது அடுத்த படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தமிழ் திரை உலகில் சாந்தி டாக்கீஸ் என்ற நிறுவனம் கடந்த ஆண்டு நுழைந்தது என்பதும் முதல் படமாக சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான ’மாவீரன்’ என்ற படத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ’மாவீரன்’ படம் 95 கோடி வசூல் செய்த நிலையில் இந்நிறுவனத்திற்கு 65 கோடி லாபம் கிடைத்ததாகவும் இதையடுத்து தற்போது அடுத்த படத்தை தொடங்கி உள்ளதாக மகிழ்ச்சியுடன் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக சித்தார்த் நடிக்க உள்ளார். இந்த படம் அவரது நாற்பதாவது படம் என்பதால் இப்போதைக்கு ’சித்தார்த் 40’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ கணேஷ் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தில் முன்னணி நாயகி நடிக்க இருப்பதாகவும் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தை 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
We are extremely happy to join hands with #Siddharth for our Production No.2, to be directed by @sri_sriganesh89.#Siddharth40 @iamarunviswa pic.twitter.com/TUBylI9WW8
Listen News!