• Oct 22 2024

பிரபல ரியாலிட்ரி ஷோவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன்- வைரலாகும் ப்ரோமோ வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் பல்வேறு விதமான ரியாலிட்ரி ஷோக்கள் மற்றும் சீரியல்கள் என்பன ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் சிறந்த சீரியல்கள் மற்றும் ரியாலிட்ரி ஷோக்களை ஒளிபரப்புவதில் ஷு தமிழும் முக்கிய இடம் வகிக்கின்றது.

அந்த வகையில் ஷு தமிழில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்ரி ஷோ தான் டான்ஸ் ஜோடி டான்ஸ். இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக சினேகா சங்கிதா மற்றும் பாபா பாஸ்கர் இருந்து வருகின்றனர். அத்தோடு இந்த நிகழ்ச்சியை விஜய் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்த நிலையில் தற்பொழுது இந்த நிகழ்ச்சியானது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எனவே இந்த இறுதி நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இதில் போட்டியாளர்களின் நடனத்தை பார்த்து மெய் சிலிர்த்து போயுள்ளார்.

இது குறித்த ப்ரோமோ வீடியோ தான் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement