• Sep 22 2024

சிவகார்த்திகேயனுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் ஆகியோர்களுடன் இணைந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைய இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ’கூலி’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ’புறநானூறு’என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’புறநானூறு’என்ற படத்தில் லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. முதலில் ’புறநானூறு திரைப்படம் சூர்யாவை வைத்து இயக்க சுதா கொங்கரா திட்டமிட்ட நிலையில் அப்போது சூர்யாவுடன் ஒரு முக்கிய கேரக்டரில் துல்கர் சல்மான் நடிப்பதாக இருந்தது. தற்போது  இந்த கேரக்டரில் தான் தற்போது லோகேஷ் கனகராஜ் நடிக்க இருப்பதாகவும் படத்தின் கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டர் இது என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Advertisement

Advertisement