• Mar 11 2026

விஜய் சினிமா விட்டு போறது கஷ்ட்டமா இருக்கு! உருக்கமாக பேசிய வெங்கட்!

shali / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் - வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 5ஆம் தேதி வெளிவந்த GOAT திரைப்படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய் அரசியலுக்கு நுழைந்த பின்பு முதன்முதலாக வெளியான இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது 69 ஆவது படத்துடன் தான் சினிமா துறையில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். 


இதன் காரணத்தினால் கோட் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு  காணப்பட்டது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் சிவகார்த்திகேயன், திரிஷா ஆகியோர் கேமியோ ரோடில் நடித்துள்ள காட்சிகளை பார்த்த ரசிகர்கள் திரையரங்கை அதிர வைத்திருந்தனர்.


இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்ச்சியில் கோட் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுஉள்ளனர். அந்த நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு " விஜய் சார் எப்படி இவ்வளோ நடிகர்கள் தனது படத்துல நடிக ஒத்துக்கிட்டாருனு தெரியல அதும் ஒரு சீன்ல நான் சொன்னான் இத புடிங்க யாரும் வந்த சுட்டுருவன்னு மிரட்டுங்க சுட்டுராதிங்கனு சொல்லுங்கன்னு சொன்னன். ஆனா விஜய் சார் தான் துப்பாக்கியை புடிங்க சிவா வெளில இருக்குற ரசிகர்கள் உயிர் உங்க கையிலனு சொல்லுவாரு. அதுல துப்பாக்கி அவருடைய படம். அவரு சினிமாவை விட்டு போறாரேன்னு சரியான கஷ்ட்டமா இருக்கு என்று கூறியுள்ளார்.     


Advertisement

Advertisement