• Jan 19 2025

ஹேமா கமிட்டி; முக்கிய பாயிண்ட்டை பிடித்த சுசித்ரா? அந்த லிஸ்டையும் வெளியிடுமாறு அதிரடி!

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தள பக்கங்களில் தற்போது ஹேமா கமிட்டி அறிக்கை பற்றிய பல்வேறு தகவல்களும், அதன் ஊடாக நடிகைகள் அளித்துள்ள பேட்டிகளும் தான் தற்போது பேசு பொருளாக காணப்படுகின்றது.

மலையாள சினிமாவை உலுக்கியுள்ள ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து பல முன்னணி நடிகர்கள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி வருகின்றன. அத்துடன் ஹேமா கமிட்டி மீது உள்ள நம்பிக்கையால் பல நடிகைகளும் தங்களுக்கு இடம்பெற்ற உடல் ரீதியான பிரச்சினைகள் பற்றி வெளிப்படையாக பேசி வருகின்றார்கள்.

இதை தொடர்ந்து மலையாளத்தில் மட்டுமில்லாமல் தெலுங்கு, தமிழிலும் இதன் எதிரொலி தொடருகின்றது. அதன்படி ஒரு சில நடிகைகள் தற்போது தான் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர், இயக்குனர்கள் மூலம் தாம் பாதிக்கப்பட்டதாக திடுக்கிடும்  தகவல்களை தெரிவித்து வருகின்றார்கள்.


இந்த நிலையில், தமிழ் சினிமாவிலேயே சர்ச்சைக்கு என்று பெயர்  போன பாடகி சுசித்ரா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சம்பவம் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனாலும் இவர் இந்த விடயத்தில் சரியாக கேள்வி எழுப்பியுள்ளதாக பலரும் அவருக்கு சப்போட்டா இருந்து வருகின்றார்கள்.

அதாவது மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து பெரும் பரபரப்பாக காணப்படுகின்றது. ஆனாலும் சுசித்ரா லஞ்சம் வாங்கியவர் தப்பு என்றால் லஞ்சம் கொடுத்தவரும் தப்பு தானே.. அவர்களின் லிஸ்டையும் வெளி  விடுங்கள் என்று மிகப்பெரிய அதிர்வலையை உருவாக்கியுள்ளார்.

அதாவது மலையாள சினிமாவில் நடிகைகள் சிலர் தமது கேரியருக்காக நடிகர்கள், இயக்குனர்கள் கேட்கும் பாலியல் லஞ்சத்தை கொடுத்துள்ளார்கள். தற்போது நடிகர்களின் பெயர்கள் மட்டும் தான் அடிபடுகின்றது. இந்த லஞ்சம் கொடுக்கத் துணைபோன நடிகைகளின் பெயரும் வெளியிட வேண்டும் என்று சுசித்ரா அதிரடியாக தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement