சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், சீதாவுக்கு தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நடக்கின்றது. அங்கு விஜயா அனைவர் மீதும் பாசத்தை கொட்டி தீர்க்கின்றார். மேலும் மீனாவின் தோழிகளுக்கு ஸ்வீட் ஊட்ட அதனை வீடியோவாக பார்வதி எடுக்கின்றார்.
இதை பார்த்த மீனா அத்தை இப்படி நடந்து கொள்வது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அவர் இப்படி நடப்பதும் நல்லா இருக்கு என கூறுகின்றார். அதற்கு முத்து அம்மா செய்வதில் ஏதோ சந்தேகமா இருக்கு என்று சொல்கின்றார்.
பங்க்ஷனின் போது சீதாவும் முத்துவும் பேசிக்கொண்டு இருக்க அதை பார்த்த அருண் கோபப்படுகின்றார். இதனால் அவரை அழைத்து விடுகின்றார். அதன் பின்பும் சீதா முத்துவுடன் பேச தனது பைலை எடுக்க வேண்டும் என்று கடுப்புடன் சீதாவை அழைத்துச் செல்கின்றார். இதனை மீனாவும் கவனித்துக் கொண்டுள்ளார்..
இதைத் தொடர்ந்து நீயும் பலகுரலும் இங்கே இருங்க நானும் கிறிஸும் கிளம்புறோம் என்று முத்து கிளம்பிச் செல்கின்றார். பின்பு ஐஸ்கிரீம் கடை ஒன்றில் அவர்கள் இருவரும் ஐஸ்கிரீம் குடித்துக் கொண்டு இருப்பதை பார்த்த பிஏ உடனே ரோகிணிக்கு வீடியோ கால் எடுக்கின்றார்.
இதன்போது தனக்கு இரண்டு லட்சம் பணம் வேண்டும் தரவில்லை என்றால் இப்போதே லைஃவ் டெலிகாஸ்ட் காட்டுவேன் என்று ரோகிணியை மிரட்டுகின்றார். இதனால் ரோகிணியும் பணம் தருவதாக ஒத்துக் கொள்கின்றார்.
அதன் பின்பு பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் மனோஜின் ஷோரூம் லோக்கரில் இருந்து பணத்தை எடுக்கின்றார். அதன்படி கேமராவை ஆப் செய்து பணத்தை எடுத்து விட்டு அந்த பழியை வேலை செய்பவர்கள் மீது சுமத்தி அவர்களை வேலையில் இருந்து அனுப்பி விட திட்டம் போடுகின்றார்.
இன்னொரு பக்கம் விஜயா பெயரில் அன்னதானம் போட்டுக் கொண்டு இருக்க அது தனது அம்மா இல்லை என நினைத்த முத்து அங்கு ஒரு வயதானவரை அழைத்துச் செல்கின்றார். இதன் போது விஜயா உணவு பரிமாறிக் கொண்டு வர முத்துவும் சாப்பிட அமர்ந்து விடுகின்றார். இறுதியில் முத்துவை பார்த்த விஜயா அதிர்ச்சி அடைகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!