• May 20 2024

விக்ரமுடன் மோதும் சிம்பு ; பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து பல படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.இது ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்று தான் கூற வேண்டும்.

அந்தவகையில் அண்ணாத்த, வலிமை, ET, பீஸ்ட், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் தொடர்ந்து அடுத்த மாதம் கமலின் விக்ரம் திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த பட்டியலில் சிம்பு மற்றும் விக்ரமும் இணையவுள்ளார்களாம். ஆம், விக்ரமின் கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே சிம்பு மற்றும் கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படமும் அதே ஆகஸ்ட் 11 ஆம் தேதியில் வெளியாகுமென கூறப்படுகிறது.

அப்படியானால் இரண்டு முன்னணி நடிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கையில் எந்த படம் வசூலில் அள்ளிக்குவிக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்தே பார்ப்போம்.

Advertisement

Advertisement