• Apr 28 2024

ஸ்ருதி ஹாசன் போட்டிருக்கும் புது டாட்டூ...தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். அவர் தற்போது தெலுங்கு படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்து அவர் பிரபாஸ ஜோடியாக சலார் படத்தில் நடித்து வருகிறார்..

இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைப்பார்.


தற்போது ஸ்ருதி அவரது காதலரின் சொந்த மாநிலமான அஸாமுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் ஒரு புது டாட்டூவை போட்டுக்கொண்டிருக்கிறார்.

'ஷ்ருதி' என அவரது பெயர் அருகில் முருகன் வேல் குறியீடு அந்த டாட்டூவில் இருக்கிறது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 




Advertisement

Advertisement

Advertisement