• Sep 21 2024

முதல் டாஸ்க்கிலேயே ஹஃயஸ்ட் புள்ளியைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்த ஸ்ருதிகா- கடுப்பான ஏனைய போட்டியாளர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் காமெடி கலந்த சமையல் ஷோ தான் குக்வித் கோமாளி சீசன் 3. இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றானது இன்றைய தினம் பிற்பகல் 3 மணியிலிருந்து ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ருதிகா, தர்ஷன், அம்மு அபிராமி, வித்யூலேகா, கிரேஸ் கருணாஸ், சந்தோஷ் பிரதாப் என 6 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

குக்குகள் மற்றும் அவர்களது கோமாளிகள் காம்பினேஷன் முடிந்து, அட்வான்டேஜ் ரவுண்டில் வித்தியாசமான டாஸ்க்கை அவர்கள் தற்போது எதிர்கொண்டு வருகின்றனர். கலக்கலான கமெண்ட்டுகள், பல நையாண்டிகள் என கலக்கலாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது.

முதலில் அட்வான்டேஜ் ரவுண்டில் சிறப்பாக செயல்பட்டு அம்மு அபிராமி வெற்றிப் பெற்றார். அவரது கோமாளியாக புகழ் செயல்பட்டார்.

இதையடுத்து முதலாவது ரவுண்ட் காம்போ டாஸ்க்காக அமைந்தது. இதில் ஒவ்வொரு குக்கிற்கும் 3 பொருட்கள் கொடுக்கப்பட்டது. இதை கோமாளிகள் தேர்ந்தெடுத்த நிலையில், அதிலும் ட்விஸ்ட்கள் கொடுக்கப்பட்டது. சிறிய ரக புஷ்கார்களில் சென்று கோமாளிகள் தேவையான பொருட்களை எடுத்து வர வேண்டும் என்று டாஸ்க் வைக்கப்பட்டது.

இதனிடையே குக்குகள் வாயில் பிளாஸ்திரிகள் ஒட்டப்பட்டன. அதேபோல கோமாளிகள் காதில் ஹெட்போன்கள் வைக்கப்பட்ட நிலையில், குக்குகள் தங்களுக்கு தேவையான பொருட்களை போர்ட்டில் வரைந்து கோமாளிகளுக்கு புரிய வைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. வாய் தவறி பேசிவிட்டால் அவர்கள் ட்ரெட்மில்லில் ஒரு நிமிடம் நடக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த டாஸ்கில், சிக்கன், பீட்ரூட், மட்டன், மஷ்ரூம் என குக் செய்வதற்கு பொருட்கள் கொடுக்கப்பட்டன. மூன்றாவது பொருளையும் டிராகனை வைத்து அவர்கள் தேர்ந்தெடுத்தனர். அதில் சிகப்பு முள்ளங்கி, பர்ப்பிள் கோஸ் உள்ளிட்டவற்றை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். இதில் சிகப்பு முள்ளங்கியை வைத்து ஸ்ருதிகா ஐஸ்கிரீம் செய்தது நடுவர்களை வெகுவாக கவர்ந்தது.

சந்தோஷ் பிரதாப்பின் டிஷ்ஷை பார்த்து நடுவர் தாமு அவருக்கு எழுந்து நின்று சல்யூட் செய்தார். இந்த ரவுண்டில் தர்ஷன் மோசமான கமெண்ட்ஸ்களை பெற்றார். இந்த போட்டியில் 40 மார்க்குகளுக்கு 36 பெற்று ஸ்ருதிகா முதலிடத்தை பெற்றிருந்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை கிரேஸ் மற்றும் சந்தோஷ் பெற்றிருந்தனர்.

இதன் பின்னர் தற்பொழுது இரண்டாவது காம்போ டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இதிலும் கிடைக்கும் புள்ளியையும் முதலாவது ரவுண்டில் கிடைத்த புள்ளியையும் கூட்டும் போது யாருக்கு அதிக புள்ளி கிடைக்குதோ அவரே வெற்றியாளர் என்று நடுவர்கள் அறிவித்ததால் அனைவரும் சுவாரஸியமாக சமைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement