பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட ஜெனிலியா, அதைத் தொடர்ந்து சச்சின், உத்தமபுத்திரன், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார்.
தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர். திருமணத்திற்கு பிறகு தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார்.
மராட்டிய பேரரசர் சத்திரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ராஜா சிவாஜி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது.
இதன்போது, மேடையில் பேசிய ரிதேஷ் தேஷ்முக், தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கலங்கினார்.

"சத்திரபதி சிவாஜி மகாராஜின் கதையை திரையில் சொல்ல வேண்டும் என்பது என்னுடைய 25 ஆண்டு கால கனவு. இதற்காக பல இரவுகள் உறக்கமின்றி உழைத்துள்ளேன்"
என கூறி தன் குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும்போது அவர் தேம்பி தேம்பி அழுதார்.

அருகிலேயே நின்றிருந்த ஜெனிலியா, கணவரின் இத்தனை ஆண்டு கால கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் நினைத்து மேடையிலேயே தேம்பி தேம்பி அழுதார். ஒரு கட்டத்தில் அவரால் பேசக்கூட முடியவில்லை. இந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.
அழுது கொண்டிருந்த ஜெனிலியாவை கண்ட ரிதேஷ் தன் பேச்சை சற்று நிறுத்தி அவரது அழுகையை அன்புடன் கட்டுப்படுத்தினார். மேலும் "தனது கனவுகளுக்கு ஜெனிலியாவே மிகப்பெரிய ஆதரவு" என புகழாரம் சூட்டினார்.
இந்த சம்பவத்தின் புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் வைரலானது. காதலும் அர்ப்பணிப்பும் கலந்த இந்த தம்பதியின் உணர்வுகரமான தருணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
Listen News!