தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர் ரம்பா. இவர் 90களிலிருந்து இன்று வரை பலரின் கனவு கன்னியாக காணப்படுகிறார். அழகும் வசீகரிக்கும் நடிப்பும் மூலம் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய அவர், தனது திரைப்பயணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரான தொழிலதிபர் இந்திரனை திருமணம் செய்து கொண்ட ரம்பா, அதன் பின்னர் கனடாவில் குடும்பத்துடன் செட்டிலாகி வாழ்ந்து வருகிறார். தற்போது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் அவர் பகிர்ந்த ஒரு சுவாரசியமான சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. தேசிய கீதம் படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் முரளியுடன் நடித்துக்கொண்டிருந்த போது இந்த நிகழ்வு நடந்ததாக ரம்பா தெரிவித்துள்ளார்.

அதாவது, ஒரு நாள் ஷூட்டிங் தயாரிப்பில் இருந்தபோது, ரம்பாவின் தலையில் இருந்த தூசியை தட்டிவிட முரளி முயற்சித்தாராம். ஆனால் அதை கண்ணாடியில் பார்த்த ரம்பா, அவர் தன்னை பயமுறுத்த முயற்சிக்கிறார் என்று தவறாக புரிந்து கொண்டு பயத்தில் அவரை அடித்துவிட்டாராம்.
பின்னர் உண்மை தெரிந்ததும் உடனே மன்னிப்பு கேட்டதாகவும், அந்த சம்பவத்தை இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது என்றும் ரம்பா பகிர்ந்துள்ளார். இந்த நகைச்சுவையான அனுபவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!