• May 16 2026

வயது வித்தியாசம் தான் கதையின் முதுகெலும்பா?'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' குறித்து மமிதா

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கும் சூர்யா தனது 46வது படமாக ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். Sithara Entertainments நிறுவனம் தயாரித்து வரும் இப்படம், 2026 ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள இளம் நடிகை மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார் மற்றும் பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படம் குறித்து மமிதா பைஜு பகிர்ந்துள்ள கருத்துக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் கூறுகையில், “இந்த படத்தின் கதை மிகவும் புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. குறிப்பாக வயது வித்தியாசம் இந்தக் கதையின் முக்கிய அம்சமாக இருப்பது என்னை மிகவும் கவர்ந்தது. இயக்குநர் வெங்கி அட்லூரி கதையின் சுருக்கத்தை சொன்னவுடன் நான் உடனே இந்த படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தேன்” என கூறியுள்ளார்.

மேலும், இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். சூர்யாவுடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் சிறப்பாக இருந்ததாகவும், இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது அவரது இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.


Advertisement

Advertisement