இசையமைப்பாளர் சாய் அபயங்கர் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்களில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. “சமூக ஊடகங்களில் தேவையற்ற விஷயங்கள் அதிகம் இருக்கின்றன; அதனால் அங்கிருந்து விலகியே இருக்க விரும்புகிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், தற்போது தான் ஒரு சிறிய நோக்கியா மொபைல் போன் வாங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஸ்மார்ட்போன்களை விட எளிமையான வாழ்க்கையை விரும்புவதாகவும், அதுவே மன அமைதிக்காக உதவுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், தன்னிடம் ஏற்கனவே 1000-க்கும் மேற்பட்ட பாடல்கள் தயாராக இருப்பதாக கூறியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவற்றை தனது 60 வயதிற்குப் பிறகு அல்லது தேவையான நேரங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விமர்சனங்கள் குறித்து பேசும்போது, “யாராவது என்னை விமர்சித்தால் நான் கோபப்படுவதில்லை; அதையும் ஒரு கருத்தாகவே எடுத்துக்கொள்கிறேன்.” என்ற அவரது பதில் பலரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் வெளிப்படுத்திய எளிமையான அணுகுமுறை மற்றும் வாழ்க்கை நோக்கு தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.
Listen News!