• Apr 22 2026

சாதி மதமற்றவர்.!! பார்த்திபனுக்கு சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவு

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

 கோலிவுட்டின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான பார்த்திபன், இயக்கம், நடிப்பு, பேச்சு, கவிதை என பல்துறைகளில் தனக்கென தனியிடம் பெற்றவர். 

இந்நிலையில், அவரது சாதி மதமற்றவர் சான்றிதழ் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதாவது, சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பார்த்திபன் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. அதற்கு விளக்கமளித்த அவர், தன்னை சாதி மதமற்றவராக பகிரங்கமாக அறிவித்தார்.

தொடர்ந்து, தமக்கு சாதி மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்குமாறு சோழிங்கநல்லூர் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 


ஆனால் அதில் நடவடிக்கை எடுக்கப்படாததால், அவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பார்த்திபனுக்கு சாதி மதமற்றவர் எனச் சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டதுடன், அதற்கான விண்ணப்ப நகலை ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினார்.

இந்த தீர்ப்பு, தனிநபர் அடையாளம் மற்றும் சுய அறிவிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement