• Apr 22 2026

திடீரென கைதான சிந்தாமணி.? மனம் மாறும் மனோஜ்.! ரோகிணிக்கு பெருகும் ஆதரவு

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், ரோகிணியின் உண்மையான காதலை பற்றி மீனாவுடன் முத்து பேசுகிறார். அதே நேரத்தில் சத்யாவின் காதலைப் பற்றியும் பேசுகிறார்.

இன்னொரு பக்கம் ஸ்ருதியும் ரவியிடம் ரோகிணியின் காதலை பற்றி பேசுகிறார். மேலும் மனோஜுக்கு ரோகிணி தான் சரியானவர், மனிதர்கள் என்றாலே பிழை விடுபவர்கள் தான், நாங்களும் வீட்டை விட்டு ஓடி வரும்போது எங்களுடைய அம்மா அப்பாவுக்கு துரோகம் செய்தோம் தானே, அது போல தான் ரோகிணியும் என்று அவருக்கு ஆதரவாக பேசுகிறார். ஆனாலும் அது ரவிக்கு பிடிக்கவில்லை, இனி இப்படி பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

இதைத் தொடர்ந்து முத்துவை சந்தித்த ரேகாவும் சத்யாவும் தங்களுடைய காதலை சேர்த்து வைக்குமாறு பேசுகின்றனர். மேலும் தன்னை பெங்களூருக்கு அப்பா போய் விட்டு வர சொன்னதாக கூற, உன்னுடைய வீட்டில் விஷயம் தெரிந்து விட்டதா என்று முத்து கேட்கிறார். ஆனால் ரேகா இல்லை என்று சொல்கிறார்.


மறுபக்கம் மனோஜ் தன்னுடைய வாழ்க்கையில் ரோகிணியை பற்றி நினைத்துப் பார்க்கிறார். அவரால் நடந்த நன்மைகளை நினைத்துப் பார்க்கிறார். எனினும் தன்னுடைய வாழ்க்கை முடிந்து விட்டது என புலம்புகிறார்.

இதைத் தொடர்ந்து முத்து சவாரிக்கு சென்ற இடத்தில் மீனாவை தாக்கியவரை காண்கிறார். இதனால் அவரை பின்தொடர்ந்து அடித்துப் பிடித்து உண்மையை அறிந்து கொள்கிறார். இதனால் அவரை போலீசில் சரண்டர் ஆகுமாறு கூறுகிறார்.

அதன்படி அவர் சரண்டர் ஆகி, மீனாவை தாக்கச் சொன்னது சிந்தாமணி தான் என்று சொல்கிறார். இதன்போது சிந்தாமணியை போலீசார் வந்து கைது செய்து கூட்டிச் செல்கின்றனர். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement