• Jan 18 2025

இந்த உலகத்திலேயே எனக்கு ரொம்ப பிடித்தவர் இவர் தான் ...எமோஷனலாக கூறிய பிரபல நடிகை ...

Kamsi / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அதிதி ஷங்கர் . தன்னுடைய அறிமுகப் படத்திலேயே பல ரசிகர்களை கொள்ளை அடித்த பெருமையும் இவரையே  சாரும். இவர் இயக்குநர் ஷங்கரின் இளையமகள் ஆவார்.


இந்த நிலையில்,சமீபத்தில் நடிகை அதிதி ஷங்கர் தனது சகோதரி ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில்  அது குறித்த புகைப்படத்தையும் பதிவு செய்திருந்தார் இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.


கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவரை திருமணம் செய்த நிலையில் அதன் பின்னர் நடந்த சில கசப்பான சம்பவங்கள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளும் நடிகையுமான அதிதி ஷங்கர் இந்த உலகத்திலேயே எனக்கு பிடித்த இருவர் இவர்கள்தான் என புகைப்படங்களுடன் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.  இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


மேலும் அவர் குறிப்பிட்டதாவது  ’இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் அக்கா ஐஸ்வர்யா மற்றும் தம்பி ஆர்ஜித் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் ஐஸ்வர்யா ஷங்கரின் நிச்சயதார்த்த கலக்கல் புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட நிலையில் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



Advertisement

Advertisement