• Jan 18 2025

விஜய் "தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி "வெளியானது... அதில் என்ன இருக்கிறது தெரியுமா?

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தார் என்பதும் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி உள்பட பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வந்த நிலையில் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்தார்.


மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடவில்லை என்றும், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மட்டுமே போட்டி என்றும் தெரிவித்திருந்தார். எனவே அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் கட்சியை வளர்ப்பது, கட்சிக்கு தொண்டர்களை சேர்ப்பது மற்றும் கட்சியின் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்பது ஆகிய பணிகளில் ஈடுபட உள்ளார்.


இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தோழர்களின் உறுதிமொழி தொடர்பாக தற்போது அறிக்கை வெளியாகி இருக்கிறது. "நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ்மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை சகோதரத்துவம் மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன்.

மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப்பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராக கடமையாற்றுவேன் என்று உறு சாதி. மதம் பாலினம். பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள் வேற்றுமைகளைக் களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி.

அனைவருக்கும் சமவாய்ப்பு சமஉரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி அளிக்கின்றேன்" என்பதே தமிழக வெற்றி கழக தோழர்களின் உறுதிமொழி. 


Advertisement

Advertisement