• Jun 16 2024

80ஸ் களில் கலக்கிய நடிகையின் மகளா இவங்கள்-அடடே இவ்வளவு நாளும் தெரியாம போச்சே..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் 80ஸ் 90ஸ் நடித்து பெயர் பெற்ற குணச்சித்திர நடிகைகளில் ஒருவர் தான் வனிதா கிருஷ்ண சந்திரன்.

இவர் தனது 13 வயதிலிருந்து சினிமாவில் நடித்து வருகிறார். அத்தோடு சமீபத்தில் பல சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

1979-ம் ஆண்டு வெளியான பாதை மாறினால் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர், பின்னர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து அசத்தி இருந்தார்.

ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இதன் பின் சினிமாவில் வாய்ப்பு குறைய முழு நேர சீரியல் நடிகையாக மாற்றிக் கொண்டார்.

மேலும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘கோலங்கள், அழகி, மாதவி’ போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகை வனிதா 1986ம் ஆண்டு மலையாள நடிகர் கிருஷ்ணசந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அமிர்தவர்ஷினி என்ற மகளும் உள்ளார். எனினும் தற்போது 30 வயதாகும் இவர் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டில் ஆகிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் வசிக்கும் வனிதா, படப்பிடிப்புக்காக சென்னை வந்து செல்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement