• Sep 21 2024

வாயில் கை வைத்து ஷாக்கான ராஷ்மிகா- அப்படி என்ன நடந்தது...?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கன்னடத்தில் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவரை ரசிகர்கள் அனைவரும் National Crush என கொண்டாடும் அளவிற்கு தனது திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளது.

இவர் தெலுங்கு, கன்னடம் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருவதோடு அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராகவும் திகழுகின்றார்.

அமிதாப் பச்சனுடன் குட் பை, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு, வெப்சீரிஸ் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இந்தியில் மேலும் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 

இதனால் அடிக்கடி மும்பை செல்லும் அவர் நட்சத்திர ஓட்டல்களில் தங்கி வந்தார்.இந்த நிலையில் மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி உள்ளார். 

இந்நிலையில் ஏர்போர்ட்டிற்கு ராஷ்மிகா வருகிறார் என்றாலே அவரை போட்டோ, வீடியோ எடுக்க போட்டோகிராபர்கள் மும்பை ஏர்போர்ட்டில் கூடி விடுவார்கள்.

அப்படி இன்றும் ராஷ்மிகா அவர்கள் போட்டோ எடுத்தபோது ஒரு போட்டோகிராபர் யாரோ ஒருவர் மீது மோதி தடுமாறி இருக்கிறார். அதை பார்த்து ராஷ்மிகா பதறிப்போய் இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.




 

Advertisement

Advertisement