• Apr 26 2024

சவுதி அரேபியாவின் பிரசித்தி பெற்ற மெக்கா மசூதிக்கு சென்ற ஷாருகான்- வைரல் போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் ஷாருகான்.இவர் தற்பொழுது இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஜவான் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இது தவிர இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் நடித்து வருவதோடு முக்கிய கதாப்பத்திரத்தில் நடிகர் ஜான் ஆபிரஹாம் நடித்து வருகின்றார்.


பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அட்லியின் இயக்கத்தில் ஜவான் படமும்  அடுத்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி வெளிவரவுள்ளது. 


மேலும் சமீபத்தில் ஷாருக்கான்,  DUNKI படத்தின் படப்பிடிப்புக்கு சவுதி அரேபியா சென்றார்.இந்த படத்தின் படப்பிடிப்பு சவுதி அரேபியாவின் பாலைவனத்தில் நடைபெற்றது. சவுதி அரேபியா படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் ஷாருக்கான் தனது முகநூல் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டு அதில் சவுதி அரேபியா அரசுக்கும், கலாச்சார அமைச்சகத்துக்கும், சவுதி மக்களுக்கும் நன்றி கூறியுள்ளார்.


 மேலும் Dunki படத்தின் சவுதி அரேபியா படப்பிடிப்பு நிறைவடைந்தது என்றும் கூறினார். இந்நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மசூதிக்கு ஷாருக்கான் இஹ்ராம் அணிந்து உம்ரா புனித யாத்திரை மேற்கொள்ளும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement