2001ம் ஆண்டு விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய காவ்ய அஞ்சலி என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஸ்ரீ. இவர் பிரபல இசையமைப்பாளரான கணேஷ் அவர்களின் மகன் என்பதும் முக்கியமாகும்.
அத்தோடு இவர் இந்த சீரியலைத் தொடர்ந்து ஆனந்தம் பந்தம் நாளை சதிலீலாவதி கனா காணும் காலங்கள் துளசி பிள்ளை நிலா பொம்மலாட்டம் தலையணை பூக்கள் யாரடி நீ மோகினி போன்ற சீரியல்களில் நடித்திருக்கின்றார். தற்பொழுது சன்டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தை போல சீரியலில் நடித்து வருகின்றார்.
இவ்வாறு ஏகப்பட்ட சீரியல்களில் நடித்த இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். அந்த வகையில் அண்மையில் வெளியாகிய விக்ரம் திரைப்படத்திலும் சிறு கேரக்டரில் நடித்திருக்கின்றார்.
இவர் சீரியல் நடிகை ஷமிதா என்பவரை காதலித்து 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள்.எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் ஸ்ரீ தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.அதை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீக்கு இவ்வளவு பெரிய மகளா என பார்த்து வருகிறார்கள்.
Listen News!