இளைய தளபதி விஜய் அரசியலுக்கு நுழைந்த பின்பு முதன்முதலாக வெளியான திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது 69 ஆவது படத்துடன் தான் சினிமா துறையில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதன் காரணத்தினால் கோட் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது.
அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் சிவகார்த்திகேயன், திரிஷா ஆகியோர் கேமியோ ரோடில் நடித்துள்ள காட்சிகளை பார்த்த ரசிகர்கள் திரையரங்கை அதிர வைத்திருந்தனர். ரசிகர்கள் பலரும் கொண்டாடும் நிலையில் சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஃபுல் ஃபன், ஆக்ஷன், மாஸ், என்டர்டெயின்மென்ட் உடன் வெங்கட் பிரபு சாரின் ஸ்டைல் விருந்து. முழுக்க முழுக்க விறுவிறுப்பு. ரசித்தேன் தளபதியை. பிளாக்பஸ்டர் திரைப்படத்தில் சாரின் நடிப்பு சூப்பர் முழுக்க முழுக்க நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
#GOAT was Full on Fun... action...Mass... Entertainment with @vp_offl Sir's style quirks throughout.... Enjoyed it 👌👌
— karthik subbaraj (@karthiksubbaraj) September 7, 2024
Thalapathy @actorvijay Sir's performance was a Blast 💥💥
Congratulations to whole cast n crew on this Blockbuster Film 👏👏@thisisysr , @siddnunidop ,… pic.twitter.com/zPVT8vMDmC
Listen News!