சமீபத்தில் துப்பறிவாளன்,இரும்புத்திரை,அயோகா,சண்டக்கோழி 2 போன்ற வரிசையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த நடிகர் விஷாலிற்கு இப்போது படவாய்ப்புகள் குறைந்து கொண்டு சென்றுள்ளது.இதனால் துப்பறிவாளன் 2 இணை தானே இயக்கி நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது இவருடன் இரும்புத்திரை 2 திரைப்படத்தினை ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தை ஒன்று நடந்து வருகின்றது.விஷால் மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய இரும்புத்திரை திரைப்படம் இப்போதைய சமுதாயத்திற்க்கு மிகவும் பொருந்துவதால் இதனை தற்போது ரீ ரிலீஸ் பண்ணினால் மிகவும் நன்றாக இருக்கும் என வலைப்பேச்சு பிஸ்மி தனது யூட்டியூப் வீடியோவில் கூறியிருக்கின்றார்.
இப் படத்தின் பகுதி 2 இணை எடுக்க பி.எஸ் மித்திரன் தீர்மானித்துள்ளதாகவும் அவர் சர்தார் 2 இணை இயக்கி முடித்த பின்னர் உடனடியாக இரும்புத்திரை 2 இணை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மற்றும் விஷால் இவ்வாறான தனது பல படங்களின் பகுதி 2 இல் நடிப்பதற்கு தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Listen News!