தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என ஒவ்வொருவரும் தமக்குரிய திறமையின் அடிப்படையில் வாழ்க்கையில் முன்னுக்கு வந்துள்ளார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற யோலோ திரைப்படத்தின் பூஜை நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் அமீர் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா தொடர்பாக இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அதன்படி அவர் கூறுகையில், சாமிற்கும் அவரது குழுவிற்கும் அவர்கள் வாழ்க்கையைத் துவக்கும் விழா. எனக்கு சேதுவைத் துவங்கிய நாள் தான் ஞாபகம் வருகிறது. 93ல் பாலாவின் அகிலன் பூஜை போட்ட அன்றே நின்று போய்விட்டது.
தமிழ் சினிமாவின் அத்தனை ஹீரோக்களிடமும் அந்தக்கதை போய் வந்தது. ஆனால் அது நடக்கவில்லை. பின் அது சேதுவாக மாறியது. இங்கு தான் பூஜை போட்டோம், பூஜை அன்று தொழிலாளர்கள் பிரச்சனையில் நின்று போனது. 7 வருடம் கழித்து தான் முடிந்தது. அப்புறமும் படம் வரவில்லை. என்றாவது ஒரு நாள் படம் வரும் என நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். பாலா தன் ஒட்டுமொத்த உழைப்பையும் தந்து, ஒரு தலைமுறையினருக்கு வாழ்வை வாய்ப்பை தரும் படைப்பை உருவாக்கி வைத்திருந்தார்.
படம் வெற்றி அடைந்த பிறகு எல்லோரும் சொல்வது நான் தனியாக வளர்ந்தேன் என்று ஆனால் உலகத்தில் ஒருத்தன் அப்படி ஒருவர் வளரவே முடியாது அந்த ஒரு படத்தினால் தான் நடிகர் விக்ரம் , நடிகர் சூர்யா ஆகியோர் உருவாக்கினார்கள் என தெரிவித்துள்ளார்.
Listen News!