சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான 'ஹாட்ஸ்பாட்’ என்ற திரைப்படத்தின் ட்ரெய்லரில் சரியான காட்சிகளை இணைக்காததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து அந்த படத்திற்கு செல்லவில்லை. இதனை அடுத்து இந்த படத்தை தியேட்டரில் வந்து பார்த்து படம் நன்றாக இல்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள் என்று இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் ஒரு வீடியோவை வெளியிட்ட நிலையிலும் அந்த படத்திற்கு யாரும் வரவில்லை என்பது பெரும் சோகம்
இந்த நிலையில் தற்போது அமேசான் ஓடிடியில் ’ஹாட்ஸ்பாட்’ திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் அந்த படத்தை பார்த்த அனைவரும் படம் சூப்பராக இருக்கிறது என்றும் மூடநம்பிக்கைகளை உடைக்கும் அற்புதமான கதை அம்சம் கொண்ட படம் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஆணுக்கு பெண் தாலி கட்டுவது, ஆண்களும் விபச்சாரம் செய்வார்கள் என்று கூறுவது, அண்ணன் தங்கச்சி திருமணம் செய்தால் தவறு இல்லை மற்றும் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் குழந்தைகளை கொடுமைப்படுத்துவது ஆகிய நான்கு விதமான கதைகளை இயக்குனர் விக்னேஷ் மிகவும் அற்புதமாக கொடுத்திருந்தார்.
குறிப்பாக இந்த படத்தில் சாண்டி மாஸ்டர் மற்றும் அம்மு அபிராமி ஆகிய இருவரும் அண்ணன் தங்கை என்று தெரியாமல் காதலித்து அதன்பின் இருவரும் தற்கொலை செய்ய முயற்சி செய்வது போல் படம் முடிந்திருக்கும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள டெலிட்டட் காட்சியில் சாண்டி மாஸ்டர், அம்முவை திருமணம் செய்து கொள்வதும், அதற்கு அவர் கொடுத்த விளக்கமும் இடம்பெற்றுள்ளது. இதை அடுத்து இயக்குனர் கூறிய காரணமும் அற்புதமாக இருக்கிறது என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
டிரைலரை மற்றும் மிகச் சரியாக கட் செய்து வெளியிட்டு இருந்தால் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும் என்றும் ஒரு நல்ல படத்தை இயக்குனர் விக்னேஷ் கார்த்தி எடுத்து, ஒரு மோசமான ட்ரெய்லரை கொடுத்திருக்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது. தற்போது இந்த படத்திற்கு நல்ல விமர்சனம் வெளிவந்து கொண்டிருந்தாலும், இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் என்றும் ஒரு நல்ல படத்தை எடுத்தும் சரியாக ப்ரமோஷன் செய்யாததால் தான் இந்த நஷ்டம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
Listen News!