• Jan 19 2025

இனிமேல் உங்க பாட்சா பலிக்காது ரோகிணி.. லாஸ்ட் வார்னிங் கொடுத்த விஜயா! முத்து தான் அப்பாவி

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், அதில் விஜயாவை சாப்பிட வைப்பதற்காக டேபிளில் இலையைப் போட்டு பிரியாணி, ரைத்தா, சிக்கன் 65, முட்டை என எல்லாவற்றையும் பரிமாற, அந்த வாசனையை பார்த்து மனோஜ் ரோகிணியையும் விஜயாவையும் சாப்பிட கூப்பிட அலையாத என பேசுகிறார்.

மேலும் எனக்கு சாப்பாடு ஒன்றும் வேண்டாம் என்று விஜயா  வீராப்பாக சொல்ல, முத்து அப்பாவை கண்காட்டி அவரை சாப்பிட வருமாறு கூப்பிடுகிறார். இப்படியே சாப்பிடாம இருந்தா உங்களுக்கு கிட்டினில ஸ்டோன் வரும் அல்சர் வரும் என்று ரோகிணி சொல்லவும், எனக்கு வேண்டாம் நீங்க வேணும்னா போய் சாப்பிடுங்க அப்படி என்று சொன்னதும் சரி ஆன்ட்டி என்று மனோஜ் கூட்டி வந்து சாப்பிட உட்காருகிறார் ரோகிணி.

இதை அடுத்த முத்து இது பிரியாணி கிடையாது பிரசாதம். முஸ்லிம் பிரண்டு வீட்டில் நோன்பு இருந்து சாமிக்கு படைச்சு கொடுத்த பிரியாணி. இதை எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிட்டு ஒரு விஷயத்தை வேண்டினால் கண்டிப்பா நடக்கும். பிரிஞ்சு  போனவங்க திரும்பவும் வீடு வருவாங்க என சொல்ல, விஜயா திருத்திருவென என் புள்ள இந்த வீட்டுக்கு வரணும் என்பதற்காக மட்டும்தான் சாப்பிடுறேன் என சொல்லிவிட்டு பிரியாணி ருசித்து சாப்பிடுகிறார். இதனை அண்ணாமலை பார்க்க நான் பசிக்காக சாப்பிடல என் பிள்ளை வரணும் வந்து தான் சாப்பிடுறேன் என டயலாக் விடுகிறார் விஜயா.


மேலும் இது வெளிநாட்டில் இருந்து செப்ப வர வச்சி செஞ்சிருக்காங்கன்னு சொல்ல, உடனே விஜயாவுக்கு ரோகினின் அப்பா ஞாபகம் வருகிறது. அந்த நேரத்தில் இந்தப் பிரச்சினையில் உங்க அப்பாவையே மறந்துட்டேன், உங்க அப்பா என்க? இப்போ  வரையில ஏர்போர்ட்ல இருந்து இன்னும் வந்துட்டா இருக்காரு  என விஜயா கேள்வி கேட்க, எனக்கு என்னவோ இதெல்லாம் நம்பற மாதிரி இல்லையே என்று முத்து சொல்ல, விஜயா கோபப்படுகிறார். இப்போ அது எல்லாம் எதுக்கு முதல்ல சாப்பிடுங்க என்று அண்ணாமலை சாப்பிட வைக்கிறார்.

அதன் பிறகு ரோகிணியிடம் பேசிய விஜயா, உண்மையிலேயே  உங்க அப்பா வருவாரா? இல்லையா? நீ சொல்ற கதை எல்லாம் நம்புவதற்கு நான் முட்டாள் இல்ல. உண்மையா உனக்கு அப்பா இருக்காரா? இல்ல  இதெல்லாம் கற்பனையா என்று கேட்க, என்ன ஆண்டி இப்படி எல்லாம் பேசுறீங்க. எனக்கும் எங்க அப்பா ஏன் வரலன்னு தெரியல. அவர் போனையே எடுக்க மாட்டேங்கறாரு என கண்ணீர் விட, உன் அழுகை எல்லாம் நான் நம்ப மாட்டேன் என அதிரடி காட்டுகிறார் விஜயா.

மேலும் உங்க அப்பா இங்க வந்தே ஆகணும். இல்லனா இந்த வீட்டில உனக்கான இடம் எது என்று நான் தான் தெரிவு செய்ய வேண்டி இருக்கும். மனோஜ்க்காக கூட பார்க்க மாட்டேன் என ரோகிணிக்கு வார்னிங் கொடுக்கிறார்.

மறுபக்கம் முத்துவுக்கு சீரகத் தண்ணீர் கொடுத்துவிட்டு பிரியாணி கதை பற்றி பேசிக்கொண்டு இருந்த மீனா, உங்க அம்மா சாப்பிட்டா தான் அப்பா சாப்பிடுவேன் என்று சொல்லிட்டாரு. ஆனா உங்க அம்மாவை சாப்பிட வைக்கணும் என்று நீங்க இப்படி எல்லாம் பண்ணுறீங்க. உங்களுக்கு அவங்க மேல எவ்வளவு பாசம். ஆனால் அத்தை ஒரு நாள் கூட நீங்க சாப்பிடீங்களான்னு கேட்டதில்லை என சொல்ல, எனக்கு முதல் வாய் சாப்பாடு கொடுத்தவரே அவங்க தான் என பீலிங்கோட பேசுகிறார் முத்து.

மீனா முத்துவை பற்றி பாராட்டி பேசிக் கொண்டு இருக்கவும்  வெறும் பேச்சு மட்டும் தானா? வேற ஒன்றும் இல்லையா என்று கன்னத்தை காட்ட, மீனா முத்துவை பிடித்து தள்ளிவிட்டு சவாரி இருக்குன்னு சொன்னீங்களே என்று சொல்ல, முத்து கிளம்புகிறார். அவரை பார்த்து மீனா சிரிக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement