• Jan 19 2025

மகாபலிபுரம் ரிசார்ட்டில் ரூம் போட்டு குடி, கும்மாளம் போடும் ‘டாக்டர்’ நடிகர்.. உடனிருக்கும் நடிகை இவரா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படத்தில் நடித்த நடிகர் ஒருவருடன் மகாபலிபுரம் ரிசார்ட்டில் குடி கும்மாளம் என இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நெல்சன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘டாக்டர்’ திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து மிரட்டியவர் நடிகர் வினய். இவர் ’உன்னாலே உன்னாலே’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் ’ஜெயம் கொண்டான்’ ’மிரட்டல்’ ’மோதி விளையாடு’ ’துப்பறிவாளன்’ ’ஆயிரத்தில் இருவர்’ ’என்றென்றும் புன்னகை ’உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது கூட அவர் சில படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் 44 வயதாகும் வினய், 42 வயது விமலா ராமன் என்பவருடன் காதலில் இருப்பதாகவும் லிவிங் டுகெதர் முறையில் இருவரும் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவ்வப்போது இருவரும் பல இடங்களில் சுற்றி தெரியும் புகைப்படங்கள் வைரலான நிலையில் அவர்களது சமூக வலைதளத்தில் போட்டோஷூட் புகைப்படங்களாகவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடிகை விமலா ராமன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வினய்யுடன் மகாபலிபுரம் ரிசார்ட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிந்துள்ளார். கையில் சரக்குடன் இருக்கும் புகைப்படம் உட்பட இருவரும் கொஞ்சி விளையாடும் பல புகைப்படங்கள் அதில் இருப்பதை அடுத்து இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

இந்த நிலையில் வினய் மற்றும் விமலா ராமன் ஆகிய இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் திருமணம் தேதியை விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement