• Sep 20 2024

ஆர்கே சுரேஷின் 'காடுவெட்டி' பட டீஸர் வெளியானது..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தம்பிக்கோட்டை படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். இதையடுத்து விஜய் ஆண்டனியின் சலீம், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை போன்ற படங்களை தயாரித்த அவர், கடந்த 2016-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.

எனினும் இதன் பின்னர் மருது, ஸ்கெட்ச், பில்லா பாண்டி, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மறைந்த பாமக சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகின்றது

இதில் குரு கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிக்க இருக்கிறார். இத்திரைப்படத்தை சோலை ஆறுமுகம் என்பவர் இயக்குகின்றார்.சாதிக் இசையமைக்கின்றார்.

இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.இதோ அந்த டீஸர்…

Advertisement

Advertisement