• Jun 24 2024

மீண்டும் மீண்டும் கர்ப்பமா? சஞ்சீவ் - ஆல்யா தம்பதி சொன்ன குட் நியூஸ்!

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர்கள் தான் சஞ்சீவ் ஆல்யா தம்பதியினர். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவர்களுக்கு இடையில் காதல் மலர,  2019 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது மகள் ஒருவரும் மகன் ஒருவரும் உள்ளனர்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகின்றார் . அதில் ரிஷி - ஆல்யா மானசாவின் கெமிஸ்ட்ரி நல்ல வகையில் ஒரு ஒர்கவுட் ஆகி வருவதாக ரசிகர்கள் கூறி வருவதோடு இந்த சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலை வகித்து வருகின்றது.


சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா, அடிக்கடி தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது, வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் புகைப்படங்களை வெளியிடுவது என ஆக்டிவாக இருப்பார்.


இந்த நிலையில், தற்போது சீக்கிரமாகவே குட் நியூஸ் ஒன்று சொல்லப் போறோம் அதுக்கு உங்க ஆசீர்வாதம் வேண்டும் என பதிவிட்டுள்ளார்கள் சஞ்சீவ் தம்பதியினர். இதை பார்த்த ரசிகர்கள் என்ன விஷயம் என கேட்டு கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். அத்துடன் மீண்டும் ஆல்யா கர்ப்பமாக இருக்கின்றாரோ எனவும் கேள்வி எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement