• Oct 22 2024

பிறந்த நாள் கொண்டாடும் விஜயின் இன்றைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ?

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

விஜய்  தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைப் பிடித்து  கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். 


ரசிகர்கள் இவரை "தளபதி" என்று அழைக்கிறார்கள். இவருக்குப் புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சு உள்ளிட்ட  நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர். இவரது படங்கள் ஐந்து கண்டங்கள் மற்றும் எண்பது நாடுகளில் வெளியாகி உள்ளன.


இன்றைய நிலவரத்தில் ஒரு படத்திற்கு 200 கோடி ரூபா வரை சம்பளம் வாங்குகின்றார். இவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு  730 கோடி ரூபாவாகவும் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே இவர் இன்றய தினம் தனது 50 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்கள் , திரை துறையினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ன்றனர். 

Advertisement