தமிழ் சினிமாவில் இருந்து பலர் அரசியலுக்கு சென்று சாதித்தும் உள்ளனர் , தோல்வியும் அடைந்துள்ளனர். ஆனால் சமீபத்தில் அரசியலில் இறங்கியுள்ள தளபதி விஜய்க்கு மக்களிடம் அதிக எதிர் பார்ப்பு உள்ளது என்றே கூற வேண்டும்.
தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய் ஆவார். முன்னணி நடிகராக இருக்கும் இவர் அரசியல் கட்சி ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகம் என்ற அந்த கட்சிக்கு உறுப்பினர்களையும் சேர்க்க ஆரம்பித்துள்ளார்.
இந்த நிலையிலேயே இன்றய தினம் இவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் தெருவில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அதில் "நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் , நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் அதுவே தமிழக வெற்றி கழகத்தின் தொடக்கமாக இருக்கட்டும் " என குறிப்பிடப்பட்டுள்ளது.
Listen News!