• Jun 28 2024

பிரியங்கா சோப்ரா இடுப்புக்கு என்ன ஆச்சு? காயத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி..!

Sivalingam / 5 days ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு இடுப்பில் காயம் ஏற்பட்ட நிலையில் அதற்கு அவர் சிகிச்சை அளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட பிரியங்கா சோப்ரா, விஜய் நடித்த ’தமிழன்’ என்ற திரைப்படத்தில் தான் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் அதன் பின்னர் அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட் திரையுலகில் பிரபலமானார் என்பதும் அதுமட்டுமின்றி ஹாலிவுட்டில் சில திரைப்படங்கள் மற்றும் வெப் தொடரில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது திருமணம் மற்றும் குழந்தை பிறப்பிற்கு பின்னரும் பிரியங்கா சோப்ரா திரையுலகில் பிஸியாக இருக்கும் நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுகிறார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் 91 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் இந்தியாவிலேயே மிக அதிகமாக ஃபாலோயர்கள் வைத்திருக்கும் திரை உலக நட்சத்திரங்களில் ஒருவர் பிரியங்கா சோப்ரா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் திடீரென தனது இடுப்பில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெரும் வீடியோவை பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரது இடுப்பில் சிராய்ப்பு போன்ற காயம் இருப்பதை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். அதன்பின் அவர் மறுநாள் உடற்பயிற்சிக்கு பின்னர் படப்பிடிப்பிற்கு தளத்துக்கு செல்லும் காட்சிகள், குழந்தையுடன் உணவு சாப்பிடும் காட்சிகள், குழந்தைகளுடன் விளையாடும் காட்சிகள் உட்பட பல காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.

பிரியங்கா சோப்ராவின் காயம் உண்மையில் ஏற்பட்டதா? அல்லது அவர் நடித்து வரும் ஹாலிவுட் படத்தில் காட்சிகளாக உள்ளதா? என்பது தெரியவில்லை என்றாலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் உடல் நலனை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றும், ஸ்டண்ட் காட்சிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொண்டு நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் அறிவுரை கூறும் வருகின்றனர்.

மேலும் உங்களை நினைத்தால் எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்றும், ஒரு திரைப்படத்தில் ஏற்றுக்கொண்ட கேரக்டருக்காக நீங்கள் அதிகமாகவே மெனக்கெடுக்கிறீர்கள் என்றும் ,உங்களை போலவே உங்கள் மகளும் மிகவும் அழகாக இருக்கிறார் என்பது போன்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.


Advertisement

Advertisement