• Jan 19 2025

வீடு வீடாக சென்று வழங்கப்பட்ட மரக்கன்றுகள்! மரக்கன்றுகளில் இருந்த விவேக் போட்டோஸ்!

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் பல நல்ல விடையங்கள் , பல ஏழை மக்களுக்கு உதவிகள் என செய்திருந்தாலும் இன்றளவிலும் பேசப்படுவது காமெடி நடிகர் விவேக்கின் மரக்கன்று நடும் செயலாகும். அவ்வாறே சமீபத்தில் நடந்துள்ளது.


தமிழ் சினிமாவில் கடந்த காலங்களில் கொடி கட்டி பறந்த காமெடி நடிகர் விவேக் ஆவார். இவரது நகைச்சுவைகள் அனைத்தும் சமூகத்தில் காணப்படும் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் விதமாக காணப்படுகின்றது.


இவ்வாறு இருக்கும் இவர் 1 கோடி மரக்கன்றுகளை நடும் முயற்சியில்  இருந்தார். எனினும் இவர் சமீபத்தில் மரணமடைந்து விட்டார். இந்த நிலையிலேயே நடிகர் விவேக் அவர்களின் புகைப்படங்களை கொண்ட மரக்கன்றுகளை தனியார் தொண்டு நிறுவனம் வீடு வீடாக சென்று வழங்குகின்றது. குறித்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.



Advertisement

Advertisement