• Jan 19 2025

ரோகிணிக்கு மரண பயத்தை காட்டிய பிரவுன்மணி.. மனோஜுக்கு அடித்த அதிஷ்டம்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், மீனாவும் முத்துவும் மொட்டை மாடியில் நின்று பிரவுன் மணியை பற்றி சந்தேகமாக பேசிக் கொண்டிருக்க, அதை கீழே நின்று ரோகினி கேட்டுக் கொண்டிருக்கின்றார். மேலும் முத்து எனக்கும் சந்தேகமா தான் இருக்குது. அவருடைய போட்டோவ அனுப்பி விசாரிக்க சொல்லலாம் என்று சொல்லிக் கொண்டிருக்க, இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என சொல்கிறார் ரோகிணி.

இதை அடுத்து, அடுத்த நாள் பிரவுன் மணியை வீடியோ காலில் பேச வைத்து அதனை வீட்டார்களிடம் நம்ப வைக்கின்றார்.  அவர்களும் அவர் துபாயில் இருப்பது போலவே நினைத்து கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அத்துடன் மனோஜ்க்கு இன்னும் 5 லட்சம் அனுப்பியதாக கூறுகிறார். இதன்போது அங்கு வந்த முத்து போனை வாங்கி துபாயில் எங்கே இருக்கீங்க என்று கேட்க, அவர் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்க, ரோகிணி மாமாவுக்கு வேலை இருக்குது என்று போனை வாங்கி வைக்கிறார்.

அதன் பிறகு ரூமுக்குள் போன மீனா, முத்துவிடம் எனக்கு இப்பதான் சந்தேகம் தீர்ந்துச்சு. அவர் துபாய்ல த்தான் இருக்காரு  என்று சொல்ல, இல்லை அவர் இங்குதான் இருந்திருக்கிறார். நீ பார்த்தது அவரைத்தான். இவ்வளவு நாள் போன் பண்ணாதவர் இப்ப திடீரென்று போன் பண்ணி இருக்கார் என்று ரோகிணி மேலே இன்னும் முத்துவுக்கு சந்தேகம் அதிகரிக்கிறது.


மறுபக்கம் மனோஜ் ஏன் திடீரென்று மாமா கால் பண்ணினார் அப்படி என்று கேட்க, ரோகிணி அதையும் சமாளிக்கிறார். மேலும் உங்க அப்பா ஒரு மாசத்துல வந்துருவாருல என்று கேட்டதோடு, மலேசியால இன்னொரு பிரான்ச் ஓபன் பண்ணி விடலாம் என்று  பேராசைப்படுகிறார்.

இதை தொடர்ந்து ரோகினி வித்யாவின் வீட்டுக்குச் சென்று இப்போதைக்கு எல்லாரும் நம்பிட்டாங்க என்று பேசிக் கொண்டிருக்க, அங்கு பிரவுன் மணி வருகிறார். மேலும் அப்படியே நான் துபாயில் இருக்கிற மாதிரி எடிட் பண்ணிட்டாங்க என்னாலயே நம்ப முடியல ஆனா ரொம்ப நாளைக்கு இந்த பொய் நிலைக்காது. எப்பயும் ஒருநாள் மாட்டத்தான் போறீங்க அதுக்கு முதல் உண்மையை சொல்லுங்க என ரோகிணிக்கு பக்குவமாக எடுத்து சொல்லிவிட்டு செல்கிறார்.

இதனால் ரோகினியும் யோசித்துவிட்டு மனோஜ் என் பக்கம் இருக்கணும் என்றால் ஒரு குழந்தை வேணும் என அடுத்த திட்டம் போடுகிறார். 

இறுதியாக ஸ்ருதி ரவியிடம் வீடியோ ஒன்றை காட்டி அதில் செய்தது போலவே தன்னை தூக்கிக்கொண்டு சுத்துமாறு சொல்ல, ரவியும் வேறு வழியில்லாமல் ஸ்ருதியை தூக்கிக்கொண்டு வீட்டை சுற்றுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement