• Jan 19 2025

மலேசியாவுக்கு பறந்த சிறகடிக்க ஆசை சீரியலின் க்யூட் ஜோடி! குவியும் லைக்ஸ்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மாஸ் காட்டும் சீரியல் ஆக உள்ளது தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியலுக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.

சிறகடிக்க ஆசை சீரியலில் நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களமும், சட்டென வெளிச்சத்துக்கு வரும் உண்மைகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆனாலும் இதில் ரோகினியின் கதை மட்டும் தான் இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை இதுதான் ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாகி உள்ளது. 

இந்த சீரியலில் தற்போது ரோகிணி, மனோஜ் தான் ஹீரோ ஹீரோயின்  போல உள்ளதாகவும், முத்துவும் மீனாவும் மாங்காய் ஊறுகாய் போல இருப்பதாகவும் ரசிகர்கள் தமது வெறுப்பை கொட்டி வருகின்றார்கள்.


இவ்வாறு சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜோடியாக திகழ்ந்து வருபவர்கள் தான் முத்து கேரக்டரில் நடிக்கும் வெற்றிவசந்த் மற்றும் மீனா கேரக்டரில் நடிக்கும் கோமதி பிரியா.

இந்த நிலையில் மலேசியாவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு வெற்றி வசந்த மற்றும் கோமதி பிரியா சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளன.

குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு லைக்ஸ்  குவிந்து வருவதோடு அதில் இருவரும் ரொம்ப அழகாக இருப்பதாக ரசிகர்கள் தமது சந்தோஷத்தை வெளியிட்டு வருகின்றார்கள்.


Advertisement

Advertisement