• Jul 22 2026

எத்தன யுகம் படைச்சாலும் மனுச குணம் மாறல..! தமிழில் வெளியான கல்கி 28 98 ஏடி டீசர்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கில் பிரபல நடிகர் ஆன பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம் தான் கல்கி 2898 ஏடி. இந்த படத்தில் உலக நாயகன் கமலஹாசன் மற்றும் அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றார்கள்.

சுமார் 600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கின்றார். சமீபத்தில் வெளியான பைரவா ஆந்தம் பாடலும் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படம் வைஜெயந்தி மூவிஸின் ஐம்பதாவது படம் என்பதோடு எதிர்வரும் ஜூன் 27ம் தேதி இந்த படம் வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், தற்போது கல்கி 2898 ஏடி படத்திலிருந்து புதிய டீசர் ஒன்றை உலக நாயகன் கமலஹாசன் வெளியிட்டுள்ளார். இது தமிழில் வெளியாகியுள்ளது.

தற்போது வெளியான புதிய டீசர் வைரலாகி வருவதோடு, ரசிகர்களும் இதற்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement