• Jan 19 2025

குடிக்காதே என்று சொல்ல முடியாது.. ஆனால் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: வழக்கம் போல் குழப்பிய கமல்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

மது குடிப்பவர்களை குடிக்காதே என்று சொல்ல முடியாது என்று ஆனால் அதே நேரத்தில் குடியின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று கள்ளக்குறிச்சிக்கு நேரடியாக சென்ற கமல்ஹாசன் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது கள்ளுண்ணாமை என்ற அதிகாரம் திருக்குறளில் இருப்பதால் அந்த காலத்தில் இருந்தே மது இருக்கிறது. எனவே மதுவை முழுமையாக ஒழிக்க முடியாது, மதுவிலக்கு குறித்து முயற்சி செய்த நாடுகள் பெரும் ஆபத்தை சந்தித்தன.

ஒரு விபத்து நடக்கிறது என்பதற்காக வாகனமே ஓட்டக் கூடாது என்றோ அல்லது வாகனத்தை மிகவும் மெதுவாக இயக்க வேண்டும் என்றோ சொல்ல முடியாது. அதுபோல்தான் மதுவை குடிக்காதே என்று சொல்ல முடியாது, ஆனால் அதே நேரத்தில் அளவாக குடி என்றும், குடியின் தீமை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடை அருகிலேயே விழிப்புணர்வு பதாகையை வைத்திருக்க வேண்டும்.

மதுவின் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு செலவு செய்ய வேண்டும் என்று கூறினார்.  

Advertisement

Advertisement