• Jan 19 2025

தனது ரசிகரை 'மூடிட்டு போடா...' என நாறு நாராய் கிழித்த ஸ்ருதி! அப்படி என்னாச்சு தெரியுமா?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக காணப்படும் கமலஹாசனின் மகள் தான் ஸ்ருதிஹாசன். இவர் தந்தையைப் போலவே பன்முகத்தன்மை கொண்டவராக காணப்படுகின்றார்.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்ஸ்ருதி. இதைத்தொடர்ந்து விஜய் உடன் புலி, தனுஷ் உடன் 3, அஜித்துக்கு ஜோடியாக வேதாளம், சூர்யாவுடன் சிங்கம் 3 போன்ற படங்களில்  நடித்திருந்தார்

எனினும் இவருக்கு ஹாலிவுட் சினிமாவில் பெரிதளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் டோலிவுட் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். குறிப்பாக தெலுங்கில் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார். . இறுதியாக பிரபாஸுக்கு ஜோடியாக சலார்  படத்தில் நடித்திருந்தார்.


இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவார். இதன் போது ரசிகர் ஒருவர் தென்னிந்திய பாஷையில் ஏதாவது சொல்லுங்களேன் எனக் கேட்க,  கடும் கோபத்தில் பதிலடி கொடுத்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

அதன்படி, இதுவும் ஒருவிதமான இனவாதம் தான் இதை ஏற்றுக்கொள்ள முடியாது தென் இந்தியர்களை பார்த்து இட்லி, தோசை, சாம்பார் என கிண்டல் அடிப்பது அழகு அல்ல. ஜோக்குக்கு  கூட இதை செய்ய வேண்டாம். அப்படி செய்தால் மூடிட்டு போடா என தென்னிந்திய பாஷையில் சொல்லி விடுவேன் என பதிலடி கொடுத்துள்ளார். 


Advertisement

Advertisement