• May 18 2024

குணசேகரனுக்கு ஆப்பு வைக்க ரெடியான ஜனனி... கதிரை வெளுத்து வாங்கிய ரேணுகா... அனல் பறக்கும் 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பல ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணமே இருக்கின்றன. இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் குணசேகரன் வீட்டுக்கு நந்தினியின் அப்பா வந்திருக்கிறார். அந்த நேரத்தில் நந்தினி வெளியே சென்று வீட்டுக்கு வர அவர் "தாரா ஸ்கூலுக்கு போயிட்டு வரியா" என கேட்க, அதற்கு கதிர் "இப்ப எல்லாம் தாராவை விட இவதான் அதிகமா ஸ்கூல் போயிட்டு வரா" என பேச ரேணுகா எவ்வளவு பட்டாலும் நீ திருந்த மாட்டியா என கேட்டு கதிரை வெளுத்து வாங்குகிறார்.


மறுபுறம் ஜனனி "அப்பத்தா அவர் கண்ட்ரோல் இருக்கணும்னு தான் வீட்டுக்கு கொண்டு வந்தார், ஆனால் இப்போ எல்லாமே அவருக்கு எதிரா நடக்க போகுது" என சொல்ல இதை குணசேகரன் ஒட்டு கேட்டு விடுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வந்திருக்கின்றது.

Advertisement

Advertisement