• Apr 27 2024

யோகிபாபு நடிப்பில் புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடு…!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக மக்கள் பலரின் மனதைக் கொள்ளை கொண்டவரே நடிகர் யோகிபாபு.

தனது டைம்மிங் காமெடியால் ஏராளமான ரசிகர்கள் மனதைக் கவர்ந்து இழுப்பவர். இவரின் நகைச்சுவை நடிப்பை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.

தமிழ் சினிமாவில் 2009ம் ஆண்டு யோகி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் யோகிபாபு ரஜினி, அஜித், விஜய், ஜெயம் ரவி எனப்பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல், சில காமெடி படங்களில் கதையின் நாயகனாகவும் இவரே நடித்து வருகின்றார்.

இவ்வாறு இருக்கையில் யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் 'பொம்மை நாயகி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'பொம்மை நாயகி'. பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷான் இயக்கி வருகின்றார்.

மேலும் இந்த படத்தில் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்திலும், அவரது மகளாக ‘சூப்பர் சிங்கர்’ புகழ் ஸ்ரீமதி நடித்துள்ளார். அத்தோடு வழக்கமாக காமெடி கதைக்களங்களில் நடித்து வரும் யோகிபாபுவை இந்த மூலம் வேறு மாதிரியாக பார்ப்பார்கள் என கூறப்படுகிறது.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் தன் மகளுக்காக போராடும் ஒரு தந்தையின் போராட்டம்தான் இந்த படத்தின் கதை.மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி பகுதியில் உள்ள மலை கிராமங்களில் நடைபெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்

எனினும் தற்போது இந்த படத்தில் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளதால் அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிடபடக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் மகளின் கைப்பிடித்து நடக்கும் அப்பாவாக யோகி பாபு இருப்பதை காண முடிகிறது. இந்த போஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement