சிறகடிக்க ஆசை இன்றைய எபிசொட்டில், விஜயா மனோஜ் அடிபட்டு ஹாஸ்பிடல்ல இருக்கான் அவனுக்கு சமைச்சு சாப்பாடு கொடுக்கணும் நாம எல்லாரும் சாப்பிடணும் ஆனா அதைப் பத்தி எல்லாம் கவலப்படமா அவபாட்டுக்கு பூவிக்க போட்டாள் என்று கோவமா அண்ணாமலைக்கு சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஏதோ பொறுப்பானவ என்று சொன்னிங்க இதுதானா அவளின்ர பொறுப்பு. இவளால நாம எல்லாம் பட்டினியா கிடக்கோணுமா என்று கோபப்படுகிறார்.
பிறகு முத்துவையும் கூடப்பிறந்தவனுக்கு என்ன நடந்ததுனு ஏதும் கவலைப் படுறானோ என்று அவனையும் பேசுறாள். பின் அண்ணாமலை எல்லாம் முடிஞ்சுதா இல்ல வேற ஏதும் இருக்கா என்டுட்டு விஜயவா அழைத்துக் கொண்டு போய் மீனா சமைச்சு வச்ச சாப்பாட்டை எல்லாம் காட்டிறார். அதபார்த்த விஜயா எதுவும் கதைக்காமல் அமைதியாக இருக்கிறார்.
அதைத் தொடர்ந்து அண்ணாமலை முதல்ல என்ன நடந்ததுனு பாத்திட்டு கதை என்றார். பின் ரவியும் அம்மா மீனாவும் முத்துவும் பூவிக்க ஒன்னும் போகல அவங்கள் ஹாஸ்பிடல் தான் போயிருக்கினம் என்றார். பின்னர் எல்லாரும் ஒண்ணா இருந்து மீனா சமைச்சத சாப்பிட்டுக் கொள்ளுகிறார்கள்.
பிறகு மீனா ரோகிணியையும் மனோஜையும் சாப்பிட கூப்பிடுறாள் அதுக்கு ரோகிணி எனக்கு வேணாம் முதல்ல மனோஜ்க்கு கட்டுப்பிரிக்கட்டும் என்று சொல்லுறாள். பின் மனோஜ் கட்டு பிரித்த பிறகும் கண்ண திறக்க ரொம்ப கஷ்டப்படுறதப் பாத்து ரோகிணி அழுது கொண்டிருக்காள். இறுதில மனோஜ் கண்ண திறந்து எனக்கு எல்லாம் வடிவா தெரியுது என்கிறான். அதபாத்து எல்லாரும் சந்தோசத்தில அழுகிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்!
Listen News!