• Sep 20 2024

பிரபல நடிகருடன் ராத்திரி பார்டி-வனிதா விஜயகுமார் போட்ட குத்தாட்டம்-வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 நடிகர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில்  நடித்து  தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் வனிதா விஜயகுமார்.அதனைத் தொடர்ந்தும் சில படங்களில் நடித்த இவருக்கு சரியான படவாய்ப்புக்கள் அமையாததால் திருமணம் செய்து கொண்டார்.

மேலும் கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய இரண்டு திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. இந்த சூழலில்தான், விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 3 இல் பங்கு கொண்டு பிரபல்யமானார்.



இதனைத் தொடர்ந்து விஜய்டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வந்தார். அத்தோடு அவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.அத்தோடு தற்போது நடைபெற்று கொண்டு இருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தானாகவே வெளியேறினார்.



சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என கலக்கி வரும் வனிதா விஜயகுமார், பிசினஸிலும் பிசியாக உள்ளார்.தனது துணிக்கடையில் நண்பர்களுடன் இரவு பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்களை பதிவிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

இந்நிலையில், தனது நண்பர்கள் மற்றும் நடிகர்களுடன் வனிதா விஜயகுமார் பார்ட்டி பண்ண புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.



அத்தோடு தொடர் விடுமுறை காரணமாக தனது நண்பர்கள் மற்றும் நடிகர்களுடன் நடிகை வனிதா விஜயகுமார் ஜாலியான நைட் பார்ட்டி கொண்டாடி உள்ளார். அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார் வனிதா விஜயகுமார்.

காமெடி நடிகர் ரோபோ சங்கரும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என கலக்கி வரும் நிலையில், அவருடன் இணைந்து வனிதா விஜயகுமார் குத்தாட்டம் போட்டுள்ளார். இருவரும் இணைந்து டான்ஸ் ஆடும் புகைப்படங்களையும் வனிதா விஜயகுமார் தனது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி உள்ளார்.



தனது நண்பர்களுடன் கெட்டுகெதர் பார்ட்டி நடத்திய நடிகை வனிதா விஜயகுமார் சந்தோஷத்தில் சிரிக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. நடிகர் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி உள்ள அந்தகன் படத்தில் சிறப்பான ரோலில் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். கூடிய விரைவிலேயே அந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Advertisement

Advertisement