பாலிவுட் சினிமாவில் எப்போதும் நடனப் பாடல்களுக்கு தனி மவுசு உண்டு. அதிலும் கிளாமர் டான்ஸ் மூவ், டாப் ஹீரோயின்ஸ் இருந்தா ரசிகர்களின் மனசு தாராளமா மாறிவிடும். அதைப் புலப்படுத்தும் அளவுக்கு தற்போது ராஷ்மிகா மந்தனா மற்றும் மலைகா அரோரா இணைந்து ஆடியுள்ள 'பாய்சன் பேபி' பாடல் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் ஜெட் ஸ்பீட்டில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

‘தம்மா’ என்பது ஆயுஷ்மான் குரானா மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும், ஒரு ஹாரர் காமெடி திரைப்படம். இந்த படத்துக்கான முன்னேற்றம், முதல் லுக், மற்றும் டீசர் படைப்புகளின் மூலமாகவே ரசிகர்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
இப்போது, பாய்சன் பேபி எனும் முதல் சிங்கிள் பாடல் வெளியாகியிருக்க, அது ரசிகர்கள் மனதில் அதிரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாடல் வெளியாகிய சில நிமிடங்களுக்குள்ளேயே சமூக வலைத்தளங்களில் ஒரே கலாட்டா. ரசிகர்கள் ஷாருக்கானின் 'தக்க தையா தையா' பாடலை ஞாபகம் கூர்ந்துள்ளனர்.
அந்த பாடலில், மலைகா அரோரா, ரயில் மீது நடனம் ஆடுவார். இன்று, ராஷ்மிகாவுடன் மீண்டும் ரயில் பின்னணியில் தோன்றியதால், ரசிகர்கள், "என்ன டான்ஸ்.. வேற லெவல்.!" என்று கமெண்ட்ஸ் தெரிவித்துள்ளனர்.
Listen News!